Tuesday 21 February 2012

ஒரு நிமிடத்தில் குணமாகிய கைவலி

19-02-2012 அன்று என் மகன் ஷர்னேஷ் என்னுடன் விளையாடிக் கொண்டு இருந்தான்.அவனை தூக்கி வைத்துக்கொண்டு இருக்கும் பொழுது வலது கையினை பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.நானும் சும்மதான் அழுகிறான் என்று நினைத்துவிட்டேன். அழுவதையும் நிறுத்திவிட்டான்.ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இடது கையால் பந்தை எடுத்து என்னுடன் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்பொழுதுதான் கவனித்தேன் வலது கையினால் அவன் எதையும் எடுக்கவில்லை.
மொபைலை கொடுத்தேன் அவன் இடது கையால் வாங்கினான்..
ஷேக்கன் கேட்டால் இடது கையை தருகிறான், பை பை சொன்னாலும் இடது கையை காண்பித்தான்,அப்பாவை அடிடா என்று சொன்னேன் அவன் இடது கையால் அடித்தான்.இதைப்பார்த்து என் மனைவி கண்ணில் கண்ணீர். நான் உடனே திலக்கை கூட்டிக்கொண்டு மங்காப் ஹாஷ்பிட்டலுக்கு சென்றோம், அங்கே மருத்துவர் பார்த்துக்கொண்டு அடான் ஹாஷ்பிட்டலுக்கு செல்லும் படி கூறிவிட்டார். மனைவி கண்ணில் மீண்டும் கண்ணீர்.அடான் ஹாஷ்பிட்டலுக்கு சென்றோம் அங்கு ரிசப்சனில்
சீட்டு வாங்கி கொண்டு வெளியில் நின்று கொண்டு இருந்தோம். எங்களை கூப்பிட்டவுடன் உள்ளே சென்றோம். இண்டியன் டாக்டர், என்னவென்று கேட்டார். எல்லாவற்றையும் கேட்டார். வலது கையை பிடித்து மசாஜ் பண்ணினார் ஷர்னேஷ் ஒரே அழுகை... 5 நிமிடம் கழித்து வரும் படி கூறினார். என்ன ஆச்சர்யம் உடனேயே வலது கையை தூக்கி விளையாட ஆரம்பித்து விட்டான். மீண்டும் டாக்டரை பார்த்து நன்றி கூறி வந்தோம்.

No comments:

Post a Comment